தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் இணையும் 'உலகம் சுற்றும் வாலிபன்'?

By செய்திப்பிரிவு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படத்துக்கு 'உலகம் சுற்றும் வாலிபன்' என்று தலைப்பிடப்பட்டுள்ளதாக வெளியான செய்திக்கு படக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது.

'அசுரன்' படத்தின் பணிகளை முடித்துவிட்டு, கார்த்திக் சுப்புராஜ் படத்தின் படப்பிடிப்புக்காக லண்டனுக்குச் சென்றார் தனுஷ். ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரித்து வரும் இந்தப் படத்தில் ஜேம்ஸ் காஸ்மோ என்ற ஹாலிவுட் நடிகர் வில்லனாக நடிக்கவுள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் தலைப்பு 'உலகம் சுற்றும் வாலிபன்' என்று தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாகப் படக்குழுவினரிடம் கேட்ட போது, "இப்போது தான் படப்பிடிப்பே தொடங்கியுள்ளோம். இன்னும் தலைப்பை இறுதி செய்யவில்லை. அது பொய்யான செய்தி" என்று தெரிவித்தனர்.

இந்தப் படத்தில் தனுஷுக்கு நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக ஸ்ரேயாஸ் கிருஷ்ணா பணிபுரிந்து வருகிறார். ஒரே கட்டமாக லண்டனில் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட்டு, இந்தியா திரும்பவுள்ளது படக்குழு.

கார்த்திக் சுப்புராஜ் படத்தை முடித்துவிட்டு, மாரி செல்வராஜ் இயக்கவுள்ள படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தைத் தாணு தயாரிக்கவுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

46 mins ago

கருத்துப் பேழை

30 mins ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

3 hours ago

மேலும்