ஆக.14-ல் கதாசிரியர் கலைஞானத்துக்குப் பாராட்டு விழா: ரஜினி பங்கேற்பு

By செய்திப்பிரிவு

தமிழ்த் திரையுலகில் பிரபலமான கதாசிரியர் கலைஞானத்துக்கு, பாரதிராஜா தலைமையில் பாராட்டு விழா நடத்தவுள்ளது. இதில் ரஜினி பங்கேற்கவுள்ளார்.

1980 -90களில் தமிழ்த் திரையுலகில் பல படங்களில் பணியாற்றியவர் கலைஞானம். கதாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், வசனகர்த்தா மற்றும் தயாரிப்பாளர் என இவருக்கு பன்முகத்திறமைகள் உண்டு. இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்ட பல இயக்குநர்களுக்கு நெருங்கிய நண்பராகவும் வலம் வந்தவர்.

எழுத்தாளர் பாலகுமாரன் இயக்கத்தில் உருவான 'இது நம்ம ஆளு' படத்தில் பாக்யராஜ், இவரை ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியவர் பாக்யராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

கலைஞானம் திரையுலகிற்கு வந்து 50 ஆண்டுகள் கடந்துவிட்டன. இதற்காக பாரதிராஜா தலைமையில் பாராட்டு விழா ஒன்று நடைபெறவுள்ளது. இதில் தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகிக்கவுள்ளனர். ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கலைஞானத்தைப் பெருமைப்படுத்தவுள்ளார்.

ஆகஸ்ட் 14-ம் தேதி கலைவாணர் அரங்கில் இந்த விழா நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காகவே 'தர்பார்' படப்பிடிப்பிலிருந்து சென்னை திரும்பியுள்ளார் ரஜினி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வேலை வாய்ப்பு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்