ஆக. 12-ம் தேதி முதல் 'இந்தியன் 2' படப்பிடிப்பு: ஏப்ரல் 2021 ரிலீஸ்

By செய்திப்பிரிவு

'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு வரும் 12-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 2021-ல் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

மீண்டும் கமல் - ஷங்கர் இணைப்பில் தொடங்கப்பட்ட படம் 'இந்தியன் 2'. லைகா நிறுவனம் தயாரிக்க, படப்பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கினார்கள். ஆனால், சில நாட்களிலேயே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. படத்தின் பட்ஜெட், கமலுக்கான மேக்கப் உள்ளிட்ட பல சிக்கல்கள் எழுந்தன. இதனால் மீண்டும் எப்போது படப்பிடிப்பு என்பதே தெரியாமல் இருந்தது.

லைகா நிறுவனம் சுபாஷ்கரன் சென்னை வந்த போது, இயக்குநர் ஷங்கர் அவரைச் சந்தித்து பேசினார் . இதில் சுமுக முடிவு எட்டப்பட்டது. இதில் 200 கோடி பொருட்செலவு என்பது உறுதிச் செய்யப்பட்டது. இதனால் மீண்டும் 'இந்தியன் 2' பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர், சித்தார்த், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் கமலுடன் நடிக்கவுள்ளனர். அனிருத் இசையமைக்கவுள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்தார். ஆனால் படத்தின் தாமதத்தால் தற்போது அதிலிருந்து விலகிவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை.

தற்போது வரும் 12-ம் தேதிமுதல் மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர். இதற்கான அரங்குகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போதைக்கு ஏப்ரல் 2021-ல் வெளியிடலாம் என முடிவு செய்துள்ளனர்.

'இந்தியன் 2' படத்துக்காக அனைத்து நடிகர்களிடமும் பெருவாரியான தேதிகளை வாங்கியுள்ளது படக்குழு. அதைப் போல் இந்தப் படத்தில் கவனம் செலுத்திக் கொண்டே, தனது 'தலைவன் இருக்கின்றான்' படத்திலும் நடித்து, இயக்க முடிவு செய்துள்ளார் கமல்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

15 mins ago

இந்தியா

7 mins ago

கருத்துப் பேழை

50 mins ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்