‘டண்டனக்கா’ பாடல் விவகாரம்: ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு டி.ராஜேந்தர் வழக்கு

By செய்திப்பிரிவு

தனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் ‘ரோமியோ ஜூலியட்’ படப் பாடலுக்கு தடை விதிப்பதுடன், ரூ.1 கோடி இழப்பீடு பெற்றுத் தரக்கோரி டி.ராஜேந்தர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழ் திரையுலகில் நான் நடித்துள்ள பல படங்கள் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளன. இதனால் மக்கள் மத்தியில் எனக்கு நற்பெயர் உள்ளது.

இந்நிலையில்,ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்துள்ள ‘ரோமியோ ஜூலியட்’ என்ற திரைப்படத்தை நந்தகோபால் என்பவர் தயாரித்துள்ளார். இந்த படத்தில், ‘டண்டனக்கா நக்கா நக்கா...’ என்ற பாடலை ரோகேஷ் என்பவர் எழுதியுள் ளார். டி.இமான் இசையமைத்த அந்த பாடலை அனிருத் பாடி யுள்ளார். இப்பாடலுக்கு இடையே என்னுடைய பேச்சுக் கள், என்னுடைய உச்சரிப்புக் கள் இடம் பெற்றுள்ளன. இவற்றை பயன்படுத்துவது தொடர்பாக என்னிடம் எந்த அனுமதியையும் அவர்கள் பெறவில்லை.

இந்த பாடல் குறித்து நடிகர் ஜெயம்ரவி பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், தான் டி.ராஜேந்தரின் ரசிகனாக படத்தில் நடித்துள்ளதாக கூறியுள்ளார். இதனால், படம் முழுவதும் என்னை பற்றி அவதூறான காட்சிகள் இடம் பெறலாம். எனவே, ரோமியோ ஜூலியட்’ படம் வெளியாவதற்கு முன்பு வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமித்து, படத்தை பார்த்து அதில் இடம் பெற்றுள்ள காட்சிகள், வசனங்கள் குறித்த அறிக்கையை இந்த நீதிமன்றம் பெறவேண்டும்.

மேலும், ‘டண்டனக்கா நக்கா நக்கா’ பாடலுடன், ‘ரோமியோ ஜூலியட் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். மேலும், என்னுடைய நற்பெய ருக்கு களங்கம் ஏற்படுத்திய தற்காக ரூ.1 கோடி இழப்பீடு வழங்க ரோமியோ ஜூலியட்’ படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பின்னணி பாடியவர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

48 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்