தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் ஜனவரி 25-ம் தேதி சென்னையில் நடக் கிறது.
இது குறித்து சென்னை உயர்நீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரி மற்றும் ரிசீவர் ஏ.கே.ராஜன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் ஜனவரி 25-ம் தேதி சென்னையில் நடக்கிறது. இந்த தேர்தலில் தயாரிப்பாளர் சங்கத்தலைவர், துணைத்தலைவர்கள், கவுரவச் செயலாளர்கள், கவுரவப் பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்த தேர்தலுக்கான விண்ணப்ப படிவங்களை தயாரிப்பாளர் சங்கத்தில் டிசம்பர் 17-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிசம்பர் 26-ம் தேதி பிற்பகல் 4 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை டிசம்பர் 26-ம் தேதி மாலை 5 மணி வரை நடைபெறும். ஜனவரி 25-ம் தேதி தேர்தல் நடைபெறும். அன்றைய தினம் மாலையே வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
33 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
10 hours ago
சினிமா
10 hours ago
இந்தியா
11 hours ago
தமிழகம்
12 hours ago