விவேகம் மற்றும் மெர்சல் படத்தின் கதாபாத்திர தன்மை: காஜல் விளக்கம்

By ஸ்கிரீனன்

'விவேகம்' மற்றும் 'மெர்சல்' படத்தில் தனது கதாபாத்திர தன்மை குறித்து காஜல் அகர்வால் விளக்கமளித்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். கடந்த ஜூன் 19-ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். அதனை முன்னிட்டு ட்விட்டர் பக்கத்தில், ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது விஜய்யுடன் நடித்து வரும் படத்தின் கதாபாத்திரம் குறித்து கேட்ட போது, "அதை இப்போதே சொல்லிவிட முடியாது. ஆனால் அது வித்தியாசமாக இருக்கும் என்பதைத் தெரிவிக்கிறேன்" என்று பதிலளித்துள்ளார் காஜல் அகர்வால். மேலும், விஜய்யோடு நடித்த படங்களில் 'துப்பாக்கி' படத்தின் கதாபாத்திரம், மனதுக்கு மிகவும் நெருக்கமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அஜித்துடன் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் கதாபாத்திரம் குறித்து கேட்ட போது "விவேகம் படத்தில் வலுவான பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். விவேகம் திரைப்பட குழுவுடன் பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது" என்று பதிலளித்துள்ளார் காஜல் அகர்வால்.

விவேகம் படத்தில் அஜித் மற்றும் விஜய் இருவரையும் பற்றி ரசிகர் எழுப்பிய கேள்விக்கு, " அஜித் ஒரு சிறந்த மனிதர், விஜய் மிக இனிமையான மனிதர் மற்றும் அற்புதமான நடிகர்" என்று தெரிவித்துள்ளார் காஜல் அகர்வால்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

5 mins ago

இந்தியா

8 mins ago

இந்தியா

15 mins ago

இந்தியா

18 secs ago

விளையாட்டு

21 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்