அமெரிக்காவில் எந்திரன் சாதனை முறியடித்தது கபாலி

By ஸ்கிரீனன்

அமெரிக்காவில் 'எந்திரன்' வியாபாரத்தை ப்ரீமியர் காட்சிகள் மற்றும் முதல் நாள் காட்சிகள் ஆகியவற்றின் மூலமாகவே 'கபாலி' முறியடித்திருக்கிறது.

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கபாலி'.

சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை தாணு தயாரித்திருக்கிறார். உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி இருக்கிறது.

தமிழகத்தில் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூலையும் பெருமளவில் குவித்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி இருக்கிறது 'கபாலி'. அவற்றின் ப்ரீமியர் காட்சிகள் மற்றும் முதல் நாள் மாலை வரை உள்ள வசூல் நிலவரப்படி சுமார் 2.4 மில்லியன் டாலர்களை குவித்திருக்கிறது. இந்த வசூலின் மூலமாகவே 'எந்திரன்' படத்தின் வசூலை மிஞ்சியிருக்கிறது 'கபாலி'.

தமிழகத்தில் அதிகமான திரையரங்குகளில் வெளியாகி இருப்பதால், அதன் தெளிவான வசூல் நிலவரம் என்பது இன்று மாலை தெரியவரும் என்கிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்