பிச்சைக்காரன் பாடல் சர்ச்சை: விஜய் ஆண்டனி விளக்கம்

By ஸ்கிரீனன்

'பிச்சைக்காரன்' பாடலுக்கு எழுந்துள்ள சர்ச்சைக்கு அப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி விளக்கம் அளித்திருக்கிறார்.

இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் 'பிச்சைக்காரன்'. இப்படத்தில் 'பாழா போன உலகத்துல' என்ற பாடலுக்கு சில மருத்துவர்கள் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.

இதற்கு விஜய் ஆண்டனி விடுத்துள்ள அறிக்கையில், "'பாழா போன உலகத்துல காசு பணம் பெருசு' என்ற சமூக விழிப்புணர்வு பாடலை 'பிச்சைக்காரன்' படத்தின் விளம்பர பாடலாக கவிஞர் லோகன் எழுதியுள்ளார்.

அந்த பாடலில், பண பலம் படைத்த கல்வித்தகுதி இல்லாத சிலர் தன் பண பலத்தை உபயோகித்து தனியார் கல்வி நிறுவனங்கள் சிலவற்றுக்கு லட்சத்தையும், கோடிகளையும் கொடுத்து மருத்துவர்களாகி நல்ல மருத்துவ சமுதயாத்துக்கு களங்கம் விளைவிக்கின்றார்கள் என்பதைத்தான் 'கோட்டாவுல சீட்டு வாங்கி டாக்டராவுரான்' என்று பாடலாசிரியர் லோகன் குறிப்பிட்டுள்ளார்.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த டாக்டர்களை அவமதித்து, லோகன் அந்த பாடலை எழுதவில்லை.

இன்னும் சொல்ல போனால், கவிஞர் லோகனும், பாடலை பாடிய வேல்முருகனும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்து சாதனை படைத்தவர்கள் தான்.

ஒரு வரியை வைத்து எங்கள் மீது களங்கம் கற்பிக்க வேண்டாம். இந்த பாடலை முழுமையாக கேட்டால் தான், இப்பாடல் எழுதப்பட்ட நோக்கம் என்ன, அது யாருக்காக எழுதப்பட்டது என்பது உங்களுக்கு புரியும். இந்த பாடல் மூலம், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளைத்த்தான் எடுத்து சொல்கிறோமே தவிர, யாரையும் புண்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை.

ஒரு நல்ல மருத்துவன் எப்படி வாழ வேண்டும் என்று என்னுடைய முந்தைய படமான 'சலீம்'-ல் வாழ்ந்து காட்டியவன் நான். சமூகத்தின் மேல் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் மேல் மிகுந்த அக்கறை எனக்கும் உண்டு.

பாடலின் அர்த்தம் சிலருக்கு சரியாக புரியவில்லை என்பதால், 'கோட்டா' என்ற வார்த்தையை நீக்கிவிட்டு 'காசு கொடுத்து' என மாற்றி விட்டோம் என்பதை தங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாடலாசிரியர் லோகன் எழுதிய பாடல் வரிகள் சிலரை புண்படுத்தி இருந்தால், அதற்கு என் 'பிச்சைக்காரன்' படக்குழுவின் சார்பாக நான் விளக்கமளிக்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார் விஜய் ஆண்டனி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்