தெலுங்கில் ரீமேக் ஆகிறது ப.பாண்டி: ராஜ்கிரண் வேடத்தில் மோகன்பாபு

By ஸ்கிரீனன்

தனுஷ் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'ப.பாண்டி' தெலுங்கில் ரீமேக்காகவுள்ளது. ராஜ்கிரண் கதாபாத்திரத்தில் மோகன்பாபு நடிக்கவுள்ளார்.

தனுஷ் இயக்குநராக அறிமுகமாகி ஆகியுள்ள படம் 'ப.பாண்டி'. ராஜ்கிரண் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் தனுஷ், மடோனா செபஸ்டியன், பிரசன்னா, சாயா சிங் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏப்ரல் 14ம் தேதி வெளியாகியுள்ள இபடத்தை வுண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ளது. கே.புரொடக்‌ஷன்ஸ் வெளியிட்டுள்ளது.

இப்படத்தை சமீபத்தில் பார்த்த ரஜினி, தனுஷை வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும், தனது நெருங்கிய நண்பரான தெலுங்கு முன்னணி நடிகர் மோகன் பாபுவுக்கு திரையிட்டு காட்டியுள்ளார்.

தெலுங்கு ரீமேக்கில் மோகன் பாபு நடித்தால் நன்றாக இருக்கும் என்று ரஜினி ஆசைப்பட, அதனை அவரும் ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த ரீமேக்கின் மூலமாக தெலுங்கு திரையுலகிலும் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார் தனுஷ். இதனை சுப்பிரமணிய சிவா இயக்கவுள்ளார்.

விரைவில், இந்தியில் அமிதாப் பச்சனுக்கு 'ப.பாண்டி' படத்தை திரையிட்டு காட்டவுள்ளார்கள். அதற்குப் பிறகு இந்தி ரீமேக் உறுதி செய்யப்படும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

38 mins ago

இந்தியா

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

11 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

சுற்றுலா

4 hours ago

கல்வி

3 hours ago

மேலும்