குயின் ரீமேக்கில் நடிக்க த்ரிஷா உடன் பேச்சுவார்த்தை

By ஸ்கிரீனன்

'குயின்' தமிழ் ரீமேக்கில் கங்கனா ரனாவத் கதாபாத்திரத்தில் நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது படக்குழு.

மார்ச் 2014ல் விகாஸ் பகால் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான படம் 'குயின்'. அனுராக் காஷ்யப் மற்றும் விக்கிரமாதித்யா தயாரித்த இப்படத்தினை வயாகாம் நிறுவனம் வெளியிட்டது. விமர்சகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் இப்படம் அமோக வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தின் தென்னிந்திய ரீமேக் உரிமைகளை வாங்கியிருக்கிறார் தியாகராஜன். இப்படத்தில் கங்கனா ரனாவத் கதாபாத்திரத்தில் நடிக்க பல்வேறு முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது படக்குழு. தற்போது கங்கனா ரனாவத் கதாபாத்திரத்தில் நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது படக்குழு. தொடர்ச்சியாக அதிகமாக தேதிகள் கேட்டிருப்பதால் ஆலோசனையில் இருக்கிறார் த்ரிஷா.

'குயின்' தமிழ் ரீமேக்கிற்கு சுஹாசினி மணிரத்னம் வசனம் எழுத, ரேவதி இயக்க இருக்கிறார். தியாகராஜன் இப்படத்தை தயாரிக்க இருக்கிறார்.

'குயின்' படத்தின் கதைக்களம்:

"24 வயது நிரம்பிய பஞ்சாப் பெண் ராணி(கங்கனா ரனாவத்). வெளி உலகம் தெரியாமல் வளர்ந்த ராணியின் திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், அவரது வருங்காலக் கணவன் 'நமது திருமணம் நடைபெறாது. நமது இருவரின் வாழ்க்கை வெவ்வேறு பாதைகள் கொண்டது' என்று கூறிவிடுகிறார்.

திருமணத்திற்குப் பிறகு தேனிலவிற்கு பாரீஸ் (ராணியின் ஆசை) மற்றும் ஆம்ஸ்டர்டாம் (கணவரின் ஆசை) நகர்களுக்கு செல்ல முன்னர் திட்டமிட்டிருக்கிறார்கள். ஹனிமூனுக்கு போகவேண்டிய டிக்கெட்களில் தனியாகச் செல்கிறார் ராணி. அங்கு ராணியின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதும், அந்த பயணத்திற்குப் பிறகு இந்தியா திரும்பும் ராணியை திருமணம் செய்ய சம்மதம் தெரிவிக்கும் (நிச்சயிக்கப்பட்ட) மணமகனுக்கு, ராணி சொல்லும் பதில் என்ன?" என்பதுவும் தான் 'குயின்' படத்தின் கதை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 min ago

விளையாட்டு

24 mins ago

வணிகம்

36 mins ago

இந்தியா

38 mins ago

சினிமா

44 mins ago

ஓடிடி களம்

1 hour ago

கல்வி

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

மேலும்