லிங்குசாமி - சூர்யா படத்தில் சோனாக்‌ஷி சின்கா

By ஸ்கிரீனன்

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தில், சோனாக்‌ஷி சின்கா ஒரு பாடலுக்கு நடனமாட இருக்கிறார்.

சூர்யா, சமந்தா, மனோஜ் பாஜ்பாய் மற்றும் பலர் நடிக்க, லிங்குசாமி படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. யு.டிவி நிறுவனம் இப்படத்தினை வாங்கியிருக்கிறது. படத்தின் பர்ஸ்ட் லுக், தலைப்போடு பொங்கல் தினத்தன்று வெளியாக இருக்கிறது. யுவன் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது. கோவாவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார் லிங்குசாமி. சூர்யா, சமந்தா பங்கேற்கும் பாடல் காட்சி ஒன்றை காட்சிப்படுத்த இருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து மீண்டும் மும்பையில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

மும்பையை சுற்றியே கதை நகர்வதால், மும்பை நாயகி ஒருவரை பாடல் ஒன்றிற்கு நடனமாட வைக்கலாம் என்று ஆலோசித்து சோனாக்‌ஷி சின்காவை அணுகியிருக்கிறார்கள். அவரும் கதையில் பாடல் இடம்பெறும் இடத்தினைக் கேட்டுவிட்டு சம்மதம் தெரிவித்து இருக்கிறார்.

விரைவில், சோனாக்‌ஷி சின்கா பாடல் காட்சியை மும்பையில் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்த இருக்கிறார்கள். தமிழில் சோனாக்‌ஷி சின்கா பெயர் இடம்பெறும் முதல் படமாக சூர்யா - லிங்குசாமி படம் அமையவிருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

13 mins ago

வணிகம்

38 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்