வனமகன் படத்தின் கதைக்களம் என்ன?- ஜெயம் ரவி

By ஸ்கிரீனன்

விஜய் இயக்கத்தில் உருவாகிவரும் 'வனமகன்' படத்தின் கதைக்களம் என்ன என்பதை ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

'போகன்' படத்தின் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து சக்தி செளந்தரராஜன் இயக்கும் 'டிக் டிக் டிக்' மற்றும் 'வனமகன்' ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார் ஜெயம் ரவி.

விஜய் இயக்கத்தில் உருவாகும் 'வனமகன்' படத்தில் சாயிஷா சைகல் நாயகியாக நடித்து வருகிறார். திரு ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் உள்ள அடர்ந்த காடுகளுக்கு உள்ளும், சென்னையில் சில முக்கிய காட்சிகளும் படப்பிடிப்பு நடத்தப்பட்டு இருக்கிறது. 'பேராண்மை' படத்தைத் தொடர்ந்து இப்படத்திலும் பழங்குடி இனத்தவராக நடித்து வருகிறார் ஜெயம் ரவி.

இப்படம் குறித்து ஜெயம் ரவி, "யார் சிறந்த மனிதன் என்பதற்கான பதிலை ’வனமகன்’ ரசிகர்களுக்கு தரும். ஒரு இளைஞனுக்கும், இயற்கைக்கும் இடையே இருக்கும் காதலையும், ஒரு இளைஞனுக்கும், யுவதிக்கும் இடையே இருக்கும் சுவாரசியமான காதலையும் சொல்லும் படம். பல பயங்கரமான சம்பவங்கள் படப்பிடிப்பின்போது நடந்தன" என்று தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் சண்டைக் காட்சிகளில் மிகவும் சிரத்தை எடுத்து நடித்துள்ளார். மேலும், இப்படத்தின் கதைக்கேற்ப உடல் எடையையும் குறைத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்