ஐரோப்பாவின் மிகப் பெரிய திரையரங்கில் கபாலி திரையிடல்!

By ஸ்கிரீனன்

பாரீஸ் நகரில் உள்ள 'லீ கிராண்ட் ரெக்ஸ் (Le Grand Rex)' திரையரங்கில் முதல் இந்திய படமாக 'கபாலி' திரையிடப்பட இருக்கிறது.

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, கலையரசன், தினேஷ், தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கபாலி'. சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கும் இப்படத்தை தாணு தயாரித்திருக்கிறார். இப்படத்தை தணிக்கை செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஜூலை 15ம் தேதி இப்படம் திரைக்கு வரும் என்று வெளிநாடு விநியோகஸ்தர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில், இப்படம் பாரீஸ் நகரில் உள்ள 'லீ கிராண்ட் ரெக்ஸ் (Le Grand Rex)' திரையரங்கில் ஜூலை 14ம் தேதி திரையிடப்பட இருக்கிறது. சுமார் 2200 பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய பிரம்மாண்டமான திரையரங்கம் 'லீ கிராண்ட் ரெக்ஸ் (Le Grand Rex)' என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரையரங்கில் திரையிடப்படும் முதல் இந்திய படமாக 'கபாலி' அமைந்திருப்பது கூடுதல் சிறப்பாகும்.

இத்தகவலை 'லீ கிராண்ட் ரெக்ஸ் (Le Grand Rex)' திரையரங்கின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

ஐரோப்பிய நாடுகளில் உள்ள திரையரங்குகளிலேயே 'லீ கிராண்ட் ரெக்ஸ் (Le Grand Rex)' தான் மிகவும் பெரியது என்பது சிறப்புக்குரியது.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வர்த்தக உலகம்

2 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

உலகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்