தமிழில் கைவிடப்பட்டது குயின் ரீமேக்

By ஸ்கிரீனன்

தமிழில் தமன்னா நடிப்பில் உருவாகவிருந்த 'குயின்' ரீமேக் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மார்ச் 2014-ல் விகாஸ் பகால் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான படம் 'குயின்'. அனுராக் காஷ்யப் மற்றும் விக்கிரமாதித்யா தயாரித்த இப்படத்தினை வயாகாம் நிறுவனம் வெளியிட்டது. விமர்சகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் இப்படம் அமோக வரவேற்பைப் பெற்றது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமையை நடிகர் தியாகராஜன் கைப்பற்றினார். 'குயின்' தமிழ் ரீமேக் படத்துக்கு சுஹாசினி மணிரத்னம் வசனம் எழுத, ரேவதி இயக்க ஒப்பந்தமானார். இதில் கங்கனா ரனாவத் கதாபாத்திரத்தில் தமன்னா நடிக்கவிருப்பது உறுதியானது.

இந்நிலையில், "இப்படம் கைவிடப்பட்டது. என்ன காரணம் என்று தெரியவில்லை. ஏனென்றால் ஜூலை மாதம் முதல் 'குயின்' ரீமேக்கில் நடிக்க தமன்னா தேதிகள் ஒதுக்கியிருந்தார். ஆனால், வேறு படத்துக்கு அந்த தேதிகள் ஒதுக்கிவிடுமாறு படக்குழு தெரிவித்துவிட்டது" என்று தமன்னா தரப்பில் தெரிவித்தார்கள்.

முன்னதாக, 'குயின்' ரீமேக்கில் நடிக்கவிருப்பது குறித்து தமன்னா "'குயின்' படத்தைப் பார்த்தவுடன், இதன் ரீமேக்கில் நடிக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால், ரீமேக் செய்யப்படுமா என்ற சந்தேகம் இருந்தது. அப்படத்தைப் பார்த்தவுடன் விடுதலையானது போல் உணர்ந்தேன். தற்போது இதன் ரீமேக்கில் நடிக்கவிருப்பது சந்தோஷத்தை அளிக்கிறது. ரேவதி மேடம் என்னை வைத்து இயக்குவது, எனக்கு ஏன் அவ்வளவு முக்கியமானது என்றால் ’தேவி' படத்தில் வரும் கதாபாத்திரத்துக்கு அவர்தான் எனக்கு உந்துதல்.சிறப்பான அணியில் இணைந்திருக்கிறேன். இப்படம் ரீமேக் என்பதைத் தாண்டி, தமிழ் உணர்வுகளுக்கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

8 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்