1818 படத்தின் நாயகியாக த்ரிஷா ஒப்பந்தம்

By ஸ்கிரீனன்

மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை மையப்படுத்தி உருவாகும் '1818' என்ற படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளார் த்ரிஷா.

'சதுரங்க வேட்டை 2', 'மோகினி', '96' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் த்ரிஷா. அதனைத் தொடர்ந்து 'ஹேய் ஜுடு' என பெயரிடப்பட்ட படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகவுள்ளார்.

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் '1818' எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் த்ரிஷா. ரிதுன்சாகர் இயக்கவுள்ள இப்படத்தில் சுமன், ராஜேந்திர பிரசாத், பிரமானந்தம், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் த்ரிஷாவுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.

ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்யவுள்ள இப்படத்துக்கு தமன் இசையமைக்கவுள்ளார். மைன்ட் டிராமா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கவுள்ளது படக்குழு.

5 நட்சத்திர ஹோட்டலில் ஒர் இரவில் தவறான தகவலால் பெரும் அழிவை சந்திக்க நேரிடுகிறது. அதனைத் தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதை திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறது படக்குழு.

விரைவில் படப்பிடிப்பு தொடங்குவதற்கான முதற்கட்ட பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறது '1818' படக்குழு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

19 mins ago

வணிகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்