தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது காஷ்மோரா

By ஸ்கிரீனன்

கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் உருவாகி வரும் 'காஷ்மோரா' தீபாவளி அன்று திரைக்கு வரும் என்று தயாரிப்பு தரப்பு அறிவித்திருக்கிறது.

'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' இயக்குநர் கோகுல் இயக்கத்தில் கார்த்தி நடிக்க தொடங்கிய படம் 'காஷ்மோரா'. நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் உள்ளிட்ட பலர் கார்த்தியுடன் நடித்து வந்தார்கள்.

கார்த்தியின் நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவாகும் படம் என்று தகவல் வெளியானது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. நீண்ட நாட்களாக இப்படம் தயாரிப்பில் இருந்து வருகிறது.

நிறைய அரங்குகள் அமைத்து, கார்த்தி வெவ்வேறு கெட்டப்களில் நடிப்பதை காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். இப்படத்தின் இறுதிகாட்சிக்காக ஒரு பிரம்மாண்டமான போர் காட்சியையும் படமாக்கி இருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து, கிராபிக்ஸ் உள்ளிட்ட இதர பணிகள் தொடங்கப்பட்டது.

பட வெளியீடு குறித்து தயாரிப்பு நிறுவனம், "80 நிமிடத்திற்கு மேலான காட்சிகளுக்கு உயர்தர கிராபிக்ஸ் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் 'காஷ்மோரா' தீபாவளியன்று வெளியாகும்" என்று தெரிவித்திருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

14 mins ago

இந்தியா

3 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்