எனது வேலையை காதலித்து கொண்டாடுகிறேன்: தனுஷ்

By ஸ்கிரீனன்

'எனது வேலையை நான் காதலிக்கிறேன், கொண்டாடுகிறேன். அதனால் நான் சோர்வடைதில்லை' என்று நடிகர் தனுஷ் கூறினார்.

தனுஷ், கீர்த்தி சுரேஷ், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தொடரி'. பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்துக்கு இமான் இசையமைத்திருக்கிறார். சத்யஜோதி நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது. செப்டம்பர் 22ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.

இப்படம் குறித்து தனுஷ் அளித்துள்ள பேட்டியில், "திரைப்பட உருவாக்கத்தில் திறமையான பிரபு சாலமன் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என ஒரு நடிகனாக நான் விரும்பினேன். பிரபு சாலமன் நேர்மறை சிந்தனைகள் நிறைந்தவர். அதையே சுற்றி பரப்புபவர். பிரபு சாலமன் தொடரிக்காக அனைத்தையும் தந்து உழைத்துள்ளார்.

சத்யஜோதி தியாகராஜன் நன்கு புரிந்து ஒத்துழைக்கத் தெரிந்த தயாரிப்பாளர். எங்களுக்குத் தேவையானதைத் தருவதில் அவருக்கு தயக்கமே இருந்ததில்லை. அவரது ஆதரவு இல்லாமல் இந்தப் படம் இவ்வளவு பிரம்மாண்டாம உருவாகியிருக்க முடியாது.

திறமையானவர்களுக்கான உரிய தளத்தை அமைத்துக் கொடுக்கதான் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டது. திரையுலகில் ராஜ்கிரண் அவர்களின் 25-வது வருடம் இது. நான் இயக்கும் முதல் படத்தில் அவர் நடிக்கிறார். எனது அப்பாவின் முதல் பட நாயகனும் அவர் தான். எனது வேலையை நான் காதலிக்கிறேன், கொண்டாடுகிறேன். அதனால்தான் இயக்கம், நடிப்பு, தயாரிப்பு என ஒரே சமயத்தில் பல வேலைகள் செய்தாலும் நான் சோர்வடைவதில்லை.

'பவர் பாண்டி' என்கிற எனது முதல் இயக்கத்துக்கான திரைக்கதையை 8 மாதங்கள் முன்பே முடித்துவிட்டேன். இயக்குநர் செல்வராகவன் அதைப் படித்துப் பார்த்தார். அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அதுதான் நான் இயக்குநர் பாதைக்கு செல்ல உந்துதலாக இருந்தது. ’ஜோக்கர்’ படத்தில் ஷான் ரோல்டனின் பணி அற்புதமாக, அட்டகாசமாக இருந்தது. அதனால்தான் நான் இயக்கும் முதல் படத்துக்கு அவரை இசையமைப்பாளராக நியமித்தேன். பாலு மகேந்திரா, செல்வராகவன், வெற்றிமாறன் உள்ளிட்ட பலரது இயக்கத்தை நான் கவனித்திருக்கிறேன்.

வுண்ட்ர்பார் ஃபிலிம்ஸ் சூப்பர்ஸ்டாரின் படத்தை தயாரிப்பதில் பெருமையடைகிறது. இது எங்களுக்கு குதூகலமான தருணம். எனது மகன்கள் லிங்கா, யாத்ரா இருவரும் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள்.

உங்களை ஊக்கப்படுத்தாதவர்களை விடுங்கள், உங்கள் மீதும், உங்கள் வேலையின் மீதும் கவனம் செலுத்துங்கள். கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்" என்றார் தனுஷ்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்