விக்னேஷ் சிவனைத் தோற்கடித்த நயன்தாரா

By செய்திப்பிரிவு

விக்னேஷ் சிவனைத் தோற்கடித்த மகிழ்ச்சியில் நயன்தாரா துள்ளிக் குதிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாக நெருக்கமாகப் பழகி வருகின்றனர். இருவரும் அவ்வப்போது வெளிநாடுகளுக்குச் சென்று மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்து வருகின்றனர். குறிப்பாக, இருவரின் பிறந்த நாளின்போதும் வெளிமாநிலம் அல்லது வெளிநாடுகளுக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். சமீபத்தில் கூட அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குச் சென்று இருவரும் வழிபட்டனர்.

இந்நிலையில், நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் ‘ஏர் ஹாக்கி’ விளையாடும் ஒரு வீடியோவை, தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் விக்னேஷ் சிவன். அதில், 1050 புள்ளிகள் பெற்று நயன்தாரா வெற்றி பெற, 760 புள்ளிகளுடன் தோல்வியைத் தழுவினார் விக்னேஷ் சிவன்.

வெற்றி பெற்றதும், சின்னக்குழந்தை போல துள்ளிக் குதித்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் நயன்தாரா. விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் பதிந்த இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா நடிப்பில் ‘கோலமாவு கோகிலா’ மற்றும் ‘இமைக்கா நொடிகள்’ என அடுத்தடுத்து இரண்டு படங்கள் சமீபத்தில் ரிலீஸாகின. மேலும், அரை டஜன் படங்களுக்கு மேல் கையில் வைத்துள்ளார் நயன்தாரா.

சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கும் நயன்தாரா: வைரலாகும் வீடியோ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

சினிமா

23 mins ago

சினிமா

32 mins ago

சினிமா

35 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

33 mins ago

சினிமா

51 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

45 mins ago

சினிமா

56 mins ago

சினிமா

59 mins ago

வலைஞர் பக்கம்

1 hour ago

மேலும்