பிரபுதேவா படத்தில் 3 ஹீரோயின்கள்

By செய்திப்பிரிவு

பிரபுதேவா நடிக்கும் ‘தேவி 2’ படத்தில், 3 ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.

விஜய் இயக்கத்தில் 2016-ம் ஆண்டு வெளியான படம் ‘தேவி’. ஹாரர் காமெடிப் படமான இது, தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியானது. பிரபுதேவா ஸ்டுடியோஸ் தயாரித்த இந்தப் படத்தை, தமிழில் ஆரா சினிமாஸ் வெளியிட்டது.

பிரபுதேவா ஹீரோவாக நடித்த ‘தேவி’ படத்தில், தமன்னா ஹீரோயினாக நடித்தார். தேவி கிருஷ்ண குமார், ரூபி என்ற இரு வேடங்களில் அவர் நடித்தார். சோனு சூட், ஆர்.ஜே. பாலாஜி, சதீஷ், நாசர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சூப்பர் ஹிட்டான இந்தப் படத்தின் இரண்டாம் பாகம், தற்போது தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் நடிக்க, தமன்னா, நித்யா மேனன், எமி ஜாக்சன் என 3 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். முக்கியக் கதாபாத்திரத்தில் கோவை சரளா நடிக்கிறார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங், மொரீஷியஸில் தொடங்க இருப்பதாக இரண்டு நாட்களுக்கு முன்பு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் பிரபுதேவா. பிரபுதேவா கைவசம் தற்போது ‘யங் மங் சங்’, ‘சார்லி சாப்ளின் 2’, ‘பொன் மாணிக்கவேல்’, ‘காமோஷி’, ‘தேள்’ ஆகிய படங்கள் உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

உலகம்

11 hours ago

ஆன்மிகம்

11 hours ago

மேலும்