ஒரு வருடம் ‘என்.ஜி.கே.’வாகவே வாழ்ந்தார் சூர்யா: இயக்குநர் செல்வராகவன்

By செய்திப்பிரிவு

‘என்.ஜி.கே.’ கதாபாத்திரத்துக்கு உயிர்கொடுத்த சூர்யாவுக்கு என்றும் கடன்பட்டிருப்பேன் என இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் கடந்த மே 31-ம் தேதி வெளியான படம் ‘என்.ஜி.கே’. சூர்யா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

நிழல்கள் ரவி, உமா பத்மநாபன், பொன்வண்ணன், தலைவாசல் விஜய், வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இந்தப் படத்தை, ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் வெளியிட்டுள்ளது.

‘என்.ஜி.கே.’ படத்தைப் பற்றிக் கலவையான விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், “பல்வேறு அடுக்குகள் கொண்ட ‘என்.ஜி.கே.’ கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்து, அதற்கு உயிர்கொடுத்த சூர்யாவுக்கு என்றும் கடன்பட்டிருப்பேன். ஒரு வருடம் அவர் ‘என்.ஜி.கே.’வாகவே வாழ்ந்தார். எங்கள் அனைவருக்கும் பக்கபலமாக இருந்தார். மிக்க நன்றி சார். நான் எப்போதும் சொல்வது போல, நீங்கள் இயக்குநர்களின் நடிகர்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் செல்வராகவன்.

முன்னதாக, “ ‘என்.ஜி.கே.’ திரைப்படம் குறித்த அத்தனைக் கருத்துகளையும் தலைவணங்கி ஏற்கிறேன். மாறுபட்டக் கதையம்சத்தையும், நடிகர்களின் வித்தியாசமான நடிப்பையும் நுட்பமாகக் கவனித்துப் பாராட்டிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. இத்திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. #கத்துக்கறேன்தலைவரே” என சூர்யா ட்வீட் செய்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

46 mins ago

இந்தியா

3 hours ago

வலைஞர் பக்கம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்