ஜூன் 21-ம் தேதி ‘தளபதி 63’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு: அதிகாரபூர்வ அறிவிப்பு

By செய்திப்பிரிவு

‘தளபதி 63’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், வருகிற வெள்ளிக்கிழமை (ஜூன் 21) ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படம், தற்போதைக்கு ‘தளபதி 63’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துவரும் இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்க, கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி, ரெபா மோனிகா ஜான், இந்துஜா, வர்ஷா பொல்லம்மா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். வருகிற தீபாவளிக்கு படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில், அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார் விஜய். அதில், மகன் கதாபாத்திரத்துக்கு ‘பிகில்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம், விஜய்யின் பெயர் ‘மைக்கேல்’ எனக் கடந்த சில மாதங்களாகவே ஒரு தகவல் பரவிக் கொண்டிருந்தது. ஆனால், அது விஜய் கதாபாத்திரத்தின் பெயர் அல்ல; விஜய்யின் நண்பனாக நடிக்கும் ‘பரியேறும் பெருமாள்’ கதிர் கதாபாத்திரத்தின் பெயர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ‘தளபதி 63’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், வருகிற வெள்ளிக்கிழமை (ஜூன் 21) ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு ஃபர்ஸ்ட் லுக்கும், 22-ம் தேதி (சனிக்கிழமை) நள்ளிரவு 12  மணிக்கு செகண்ட் லுக்கும் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

உலகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வேலை வாய்ப்பு

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

கல்வி

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்