தள்ளிப்போகும் ‘காலா’

By செய்திப்பிரிவு

ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள ‘2.0’ திரைப்படம் ஏப்ரலில் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டது. இறுதிகட்ட தொழில்நுட்ப பணிகள் முடியாததால், ஜூன், ஜூலையில் ரிலீஸ் செய்ய முடிவெடுத்தனர். இதையடுத்து, ரஜினிகாந்த் நடிப்பில் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவான ‘காலா’ படத்தை ஏப்ரல் 27-ல் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு, தேதியும் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க வேலைநிறுத்தம் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களின் போராட்டம் உள்ளிட்ட காரணங்களால் புதிய படங்கள் வெளியீட்டில் பல மாற்றங்கள் இருக்கும் என்ற கூறப்படுகிறது. மேலும், போராட்டம் முடிந்த பிறகு, சென்சார் செய்யப்பட்ட படங்களை தேதி வாரியாக வரிசைப்படுத்தி ஒவ்வொன்றாக வெளியிடவும் தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது. மேலும், தயாரிப்பாளர்கள் சங்கம் வழங்க வேண்டிய தடையில்லா சான்றையும் ‘காலா’ படக்குழு இதுவரை பெறவில்லை. வேலைநிறுத்தத்தால், சான்றைப் பெற்று படத்தை தணிக்கைக்கு அனுப்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, திட்டமிட்டபடி ரிலீஸ் செய்வதில் சிக்கல் உருவாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்