“பாபநாசம் படம் பார்த்தார் கிறிஸ்டோபர் நோலன்” - கமல்ஹாசன்

By செய்திப்பிரிவு

ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன், ‘பாபநாசம்’ படம் பார்த்ததாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

பிரபல ஹாலிவுட் இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர் கிறிஸ்டோபர் நோலன். இந்தியா வந்துள்ள அவரை, நேற்று மும்பையில் சந்தித்தார் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன்.

“கிறிஸ்டோபர் நோலனை சந்தித்தேன். அவர் இயக்கத்தில் வெளியான ‘டன்கிர்க்’ படத்தை ஃபிலிம் ரீலில் பார்க்காமல், டிஜிட்டலில் பார்த்ததற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டேன். அதற்குப் பதிலாக நான் இயக்கி, நடித்த ‘ஹேராம்’ படத்தின் டிஜிட்டல் பிரதியை அவரிடம் கொடுத்துள்ளேன். நான் நடித்த ‘பாபநாசம்’ படத்தை அவர் பார்த்திருப்பதாகத் தெரிவித்தது ஆச்சரியமாக இருந்தது” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

13 mins ago

தமிழகம்

3 mins ago

சினிமா

11 mins ago

தமிழகம்

33 mins ago

க்ரைம்

49 mins ago

தமிழகம்

53 mins ago

இந்தியா

34 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்