‘சிவகார்த்திகேயன் 16’ படத்தின் ஷூட்டிங்: பூஜையுடன் இன்று தொடங்கியது

By செய்திப்பிரிவு

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங், பூஜையுடன் இன்று தொடங்கியது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வருகிற 17-ம் தேதி ரிலீஸாகும் படம் ‘Mr. லோக்கல்’. எம்.ராஜேஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தில், சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ராதிகா சரத்குமார், யோகி பாபு, ரோபோ சங்கர், சதீஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து ‘இன்று நேற்று நாளை’ ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும், ‘இரும்புத்திரை’ பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ‘ஹீரோ’ படத்திலும் தற்போது நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில், பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங், பூஜையுடன் இன்று தொடங்கியது. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படம், தற்போதைக்கு ‘எஸ்.கே. 16’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்க, ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சமுத்திரக்கனி, நட்டி, ஆர்.கே.சுரேஷ், சூரி, யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்துக்குப் பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

15 mins ago

விளையாட்டு

10 mins ago

இணைப்பிதழ்கள்

36 mins ago

தமிழகம்

46 mins ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்