எஸ்.ஏ.பாஸ்கரன் - ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் மெய்

By ஸ்கிரீனன்

எஸ்.ஏ.பாஸ்கரன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள படத்துக்கு 'மெய்' எனத் பெயரிட்டுள்ளனர்.

'கனா' படத்தின் வெற்றிக்குப் பிறகு பல்வேறு புதிய படங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது 'துருவ நட்சத்திரம்', 'கறுப்பர் நகரம்', 'மகளிர் அணி', 'சிவகார்த்திகேயன் - பாண்டிராஜ்' படம், 'வானம் கொட்டட்டும்', 'வடசென்னை 2' உள்ளிட்ட பல படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இப்படங்களுக்கு இடையே சத்தமின்றி புதிய படமொன்றில் நடித்து முடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஜீத்து ஜோசப்பிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த எஸ்.ஏ.பாஸ்கரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கிஷோர், நிக்கி சுந்தரம் உள்ளிட்டர் பலர் ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து நடித்துள்ளனர்.

முழுக்க படப்பிடிப்பு முடிந்து, இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இப்படத்துக்கு 'மெய்' என்று தலைப்பிடப்பட்டு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதனை விஜய் சேதுபதி வெளியிட்டார்.

இப்படம் முழுக்க நாயகியை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள மெடிக்கல் த்ரில்லராகும். இதில் மெடிக்கல் ரெப் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். ஏப்ரல் 27-ம் தேதி இப்படத்தின் டீஸரை இணையத்தில் வெளியிட படக்குழு முடிவு  செய்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

இந்தியா

27 mins ago

இந்தியா

19 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்