இந்தியில் ரீமேக் செய்யப்படும் ‘சூப்பர் டீலக்ஸ்’

By செய்திப்பிரிவு

சமீபத்தில் ரிலீஸான ‘சூப்பர் டீலக்ஸ்’ படம், இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.

‘ஆரண்ய காண்டம்’ படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா, சில வருட இடைவெளிக்குப் பிறகு இயக்கிய படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. கடந்த மார்ச் 29-ம் தேதி ரிலீஸான இந்தப் படத்துக்கு, சென்சார் போர்டு உறுப்பினர்கள் ‘ஏ’ சான்றிதழ் அளித்தனர்.

விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில், ரம்யா கிருஷ்ணன், சமந்தா, மிஷ்கின், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். 4 கதைகளின் தொகுப்பாக இந்தப் படம் உருவாகியிருந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார்.

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்துக்கு எதிர் விமர்சனங்கள் எழுந்தது போலவே, ஆதரவுக் குரல்களும் பலமாக ஒலித்தன. ‘தமிழ் சினிமாவில் இப்படியொரு படமா?’ என சினிமா பிரபலங்கள் சிலாகித்துக் கொண்டாடினர். வசூலிலும் இந்தப் படத்துக்கு வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முடிவெடுத்துள்ளார் தியாகராஜன் குமாரராஜா. தமிழில் அவர்தான் தயாரிப்பாளர் என்பதால், இந்தி ரீமேக்குக்கான ஆரம்ப வேலைகள் தொடங்கிவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழைப் போலவே பாலிவுட்டின் முன்னணி நடிகர்களை இந்தப் படத்தில் நடிக்கவைக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

பாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான அனுராக் கஷ்யப், இந்தப் படத்தைப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்