பதவிதான் பாலிசி; வெற்றிதான் கொள்கை- பாமக கூட்டணி குறித்து கஸ்தூரி விளாசல்

By செய்திப்பிரிவு

பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை பதவிதான் பாலிசி; வெற்றிதான் கொள்கை என்று நடிகை கஸ்தூரி விமர்சித்துள்ளார்.

 

வரும் நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக தலைமையில் பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் மற்றும் சில சிறிய கட்சிகள் இணைந்து கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் பாமகவும் பாஜகவும் இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

 

மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. மாநிலங்களவைக்கும் ஓர் உறுப்பினர் இடம் வழங்கப்பட்டது. 2011-ம் ஆண்டில் ''கார் உள்ளளவும் கடல் நீர் உள்ளளவும், பார் உள்ளளவும் பைந்தமிழ் உள்ளளவும் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்போவதில்லை'' என்று பாமகவின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார்.

 

இந்நிலையில், அதிமுக உடனான கூட்டணியை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை கஸ்தூரி, பாமகவின் அரசியல் நகர்வைக் காட்டமாக விமர்சித்துள்ளார்.

 

இதுதொடர்பாகத் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''எப்போதுமே பாமகவுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் அதிக சீட்டுகள் கிடைக்கும். பாஜக கூட்டணியில் போன முறை மிக அதிகமாக 8 சீட்டுகள். வென்றது ஒரு இடத்தில் மட்டுமே. இந்த முறை வென்றாலும் வெல்லாவிட்டாலும் ஒரு எம்.பி. பதவி நிச்சயம். வேறு என்ன வேண்டும்?

 

#வெற்றிதான் கொள்கை. #பதவிதான் பாலிசி #powerOfPower ''என்று தெரிவித்துள்ளார்.

அவரின் கருத்துக்கு நெட்டிசன்கள் ஆதரவு தெரிவித்துவருகின்றனர். பாமகவினர் கடுமையாகச் சாடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

4 hours ago

உலகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

வேலை வாய்ப்பு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

கல்வி

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்