பேட்ட தலைப்பு வந்தது எப்படி? - கார்த்திக் சுப்பராஜ் சுவாரசிய தகவல்

By செய்திப்பிரிவு

'பேட்ட' படத்தின் தலைப்பு எப்படி உருவானது என இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த நடிப்பில் பொங்கலுக்கு வெளியான 'பேட்ட' தமிழகம், பிற மாநிலங்கள், சர்வதேச வெளியீடு என அனைத்து தரப்பிலும் மாபெரும் வெற்றிப் படமாக மாறியுள்ளது. 'பேட்ட' என்ற வித்தியாசமான தலைப்பு குறித்து படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் விளக்கியுள்ளார். 

"முதலில் படத்துக்கு தலைப்பு வைக்கவில்லை. நிறைய பெயர்கள் ஆலோசனையில் இருந்தன. எனது எல்லா படங்களுக்குமே கடைசி கட்டத்தில் தான் தலைப்பு யோசித்து வைத்திருக்கிறேன். ரஜினிகாந்த் முதலிலிருந்தே படத்தின் தலைப்பு என்ன என்று கேட்டுக் கொண்டே இருப்பார்.  ஏனென்றால் அவருக்கு படத்தின் தலைப்பு மிக முக்கியம். 

கதை கேட்டு முடித்ததிலிருந்தே அந்த கதாபாத்திரத்துக்காக அவர் தயாராக ஆரம்பித்து விடுகிறார் என நினைக்கிறேன். 'அண்ணாமலை', 'படையப்பா' என அனைத்துமே அப்படி மனதுக்குள் அவர் அதில் நடிக்க தயாராக இருப்பதால் தான், ''மலை டா, அண்ணாமலை'' என்று பேசும்போது அது நன்றாக இருக்கிறது.

தொடர்ந்து என்னிடம் படத்தின் தலைப்பு பற்றி கேட்பார். எனக்கு பதட்டமாக ஆரம்பித்துவிட்டது. நான் நிறைய சொல்லுவேன். அவருக்குப் பிடிக்காது. அப்படி ஒரு நாள் பேசிக்கொண்டிருக்கும் போதுதான் திடீரென பேட்ட என்ற தலைப்பை சொன்னேன். அவர் அதை தனக்குள் பல முறை சொல்லிப்பார்த்துக் கொண்டார். சூப்பர் சார் என்று கை கொடுத்தார். பின் இது பெயராக வர வேண்டும் என்று சொன்னார். அதன் பிறகு தான் பேட்ட வேலன் என்ற பெயரை நாங்கள் யோசித்தோம்" என்று கார்த்திக் சுப்பராஜ் பகிர்ந்துள்ளார்.  

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

23 mins ago

சினிமா

39 mins ago

சினிமா

48 mins ago

சினிமா

51 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

49 mins ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்