ரஜினி - ஏ.ஆர்.முருகதாஸ்’ பட அப்டேட்: ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தம்?

By ஸ்கிரீனன்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இப்படம் 2018 தீபாவளிக்கு வெளியானது. அப்படத்துக்கு தொடர்ச்சியாக பணிபுரிந்ததால், தற்போது ஓய்வில் இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

'சர்கார்' படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். இதன் முதற்கட்டப் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. கதையாக தயாராகிவிட்டாலும், திரைக்கதையை விரைவில் முடித்து, ரஜினியிடம் சொல்லவுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்

லைகா தயாரிக்கவுள்ள இப்படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் - சந்தோஷ் சிவன் இணைந்து 'துப்பாக்கி' மற்றும் 'ஸ்பைடர்' படத்தில் பணிபுரிந்துள்ளனர். ரஜினி - சந்தோஷ் சிவன் இணைந்து 'தளபதி' படத்தில் பணிபுரிந்துள்ளனர். 'தளபதி' படத்துக்குப் பிறகு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் ரஜினி இப்படத்தில் தான் பணிபுரிய உள்ளார்.

அடுத்தாண்டு தொடக்கத்தில் தான், ரஜினியுடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்தவுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

44 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்