பிடித்த நடிகர்கள்: ரஜினி, விஜய், நயன்தாரா - ஹர்பஜன் சிங்

By செய்திப்பிரிவு

தமிழ் நடிகர்களில் ரஜினி, விஜய், நயன்தாராதாவைப் பிடிக்கும் என்று இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய சுழற்பந்து வீச்சாளரும், சிஎஸ்கே அணியில் இடப்பெற்றவருமான ஹர்பஜன் சிங் தனியார் ஊடகம் ஒன்றில் நடந்த கலந்துரையாடலில் பேசினார்.

அதில் தமிழில் பிடித்த நடிகர்கள் குறித்த கேள்விக்கு ஹர்பஜன் சிங் பதிலளிக்கையில், ''அதிகம் யோசிக்கத் தேவையில்லை  ரஜினிதான். கமல்,  ரஜினி இருவரும் சிறந்த நடிகர்கள். இளம் நடிகர்களில் விஜய் பிடிக்கும். நடிகைகளில் நயன்தாரா, த்ரிஷா, ஸ்ருதிஹாசன் ஆகியோரையும் பிடிக்கும்'' என்றார்.

தோனியை முதன்முதலாக சந்தித்த போது ஏற்பட்ட அனுபவம் குறித்த கேள்விக்கு, ”இதை நீங்கள் தோனியிடம்தான் கேட்க  வேண்டும். ஏனென்றால் நான் தோனிக்கு முன்னே தேசிய அணியில் இடப்பெற்றுவிட்டேன். 

தோனி அணியில் இடப்பெற்றபோது எங்களிடம் பேசமாட்டார். மிகுந்த கூச்ச சுபாவம் கொண்டவர். ஆனால் அவருடன் நெருக்கமாகப் பழகினால் அவர் ஜாலியான நபர் என்று அறியலாம்.

அவருடைய பிஹார் இந்திக்கு ஒரு தனித்துவம் உள்ளது. தோனி சிறந்த நபர். 

நான் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருக்கும்போது சென்னைக்கு எதிரான போட்டியில் தோற்றுவிடக் கூடாது என்று நினைப்பேன். எங்களுக்கு இடையேயான போட்டி ரஜினி படம்போல இருக்கும். நான் ஐபிஎல்லில் மும்பை அணிக்காக் ஏலம் எடுக்கப்பட்டேன். ஒருவேளை மும்பை என்னை ஏலம் எடுக்கவில்லை என்றால் எனது விரும்ப அணியாக அப்போதே  சென்னை இருந்தது'' என்றார் ஹர்பஜன் சிங்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

20 mins ago

சினிமா

38 mins ago

வாழ்வியல்

20 mins ago

தமிழகம்

56 mins ago

க்ரைம்

1 hour ago

வணிகம்

1 hour ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

உலகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்