ட்விட்டரில் தென்னிந்திய நடிகர்களில் தனுஷ் முதலிடம்

By ஸ்கிரீனன்

ட்விட்டர் பக்கத்தில் அதிகம் பேர் ஃபாலோ செய்யும் நடிகர்களில், தனுஷ் முதலிடத்தை பிடித்துள்ளார்.

தென்னிந்திய திரையுலகில் பல்வேறு பிரபலங்கள், ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ கணக்குகள் தொடங்கியுள்ளார். இதில் தங்களைப் பற்றிய வதந்திகளுக்கு விளக்கம், படம் பற்றிய தகவல்கள் என பகிர்ந்து வருகிறார்கள்.

ரஜினி, கமல் தொடங்கி பல்வேறு பிரபலங்கள் தொடர்ச்சியாக ட்விட்டர் தளத்தில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இதில், புதிதாக ஒரு மைல்கல்லை எட்டியுள்ளார் தனுஷ்.

ட்விட்டர் பக்கத்தில் தனுஷின் அதிகாரப்பூர்வ கணக்கை பின்தொடர்பவர்களின்  எண்ணிக்கை 8 மில்லியனை கடந்துள்ளது. இதன் மூலம், அவர் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். 

தென்னிந்திய நடிகர்களில் தனுஷை தான் அதிகம் பேர் பின்தொடர்கிறார்கள். கொலவெறி பாடல் ஹிட், அமிதாப்புடன் இணைந்து நடித்தது, ரஜினி படத்தை தயாரித்தது, ஹாலிவுட் படத்தில் நடித்தது ஆகியவை இந்த முதலிடத்துக்கு மிக முக்கிய காரணம் என்கிறார்கள்.

தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'மாரி 2' டிசம்பர் 21-ம் தேதி வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. அடுத்ததாக அவரே இயக்கி நடித்து வரும் படம், வெற்றிமாறன் இயக்கும் படம், மாரி செல்வராஜ் இயக்கும் படம், துரை.செந்தில்குமார் இயக்கும் படம் உள்ளிட்ட பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

13 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்