டிச.28 வெளியீட்டிலிருந்து பின்வாங்கியது சர்வம் தாளமயம்: காரணம் என்ன?

By செய்திப்பிரிவு

டிசம்பர் 28-ம் தேதி வெளியீட்டிலிருந்து பின்வாங்கியுள்ளது 'சர்வம் தாளமயம்'. இதற்கான காரணம் என்ன என்பது தற்போது வெளியாகியுள்ளது.

ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சர்வம் தாளமயம்’. ஜி.வி.பிரகாஷ், நெடுமுடி வேணு, வினித், டிடி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ராஜீவ் மேனனின் MINDSCREEN நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் டிசம்பர் 28-ம் தேதி திரைக்கு வரும் என அறிவித்திருந்தார்கள்.

ஆனால், டிசம்பர் 28-ம் தேதி வெளியீட்டிலிருந்து தற்போது பின்வாங்கியுள்ளது 'சர்வம் தாளமயம்'. 2019-ம் ஆண்டு பிப்ரவரி வெளியீடாக திரைக்கு வரலாம் என்ற ஆலோசனையில் இறங்கியுள்ளது படக்குழு.

இதற்கான காரணம் என்ன என்று விசாரித்த போது, டிசம்பர் 21-ம் தேதி 5 படங்கள் தங்களுடைய வெளியீட்டை முதலில் உறுதிப்படுத்தினார்கள். இதில் ஏதாவது 2 படங்கள் பின்வாங்கும், நாம் டிசம்பர் 28-ம் தேதி வந்தால் திரையரங்குகள் கிடைக்கும் என நினைத்துள்ளனர். ஆனால், டிசம்பர் 21-ம் தேதி வெளியீட்டில் யாருமே பின்வாங்காமல், 5 படங்களுமே வெளியாகிவிட்டது.

அவை அனைத்துக்குமே எதிர்பார்த்த வசூல் இல்லை. இந்த சமயத்தில் நமது படமும் வந்தால் சரியாக இருக்காது. ஏனென்றால் அனைவருமே புத்தாண்டு கொண்டாட்டத்தில் கவனம் செலுத்த தொடங்கிவிடுகிறார்கள். ஆகவே, இப்போது வேண்டாம், பிப்ரவரியில் வரலாம் என்று முடிவெடுத்துள்ளது 'சர்வம் தாளமயம்' படக்குழு.

'சர்வம் தாளமயம்' படத்தின் பாடல்களுக்கு சமூகவலைத்தளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 2019, பிப்ரவரி வெளியீடு என்பதால், மீண்டும் புதிதாக விளம்பரப்படுத்தும் பணிகளை ஜனவரி இறுதியில் தொடங்க திட்டமிட்டு வருகிறது படக்குழு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்