ரூ.1 கோடி வரை சேவை வரி செலுத்தவில்லை: நடிகர் விஷாலுக்கு எதிரான வழக்கு தள்ளிவைப்பு 

By செய்திப்பிரிவு

ரூ. 1 கோடி வரை சேவை வரி செலுத்தவில்லை என நடிகர் விஷாலுக்கு எதிராக தொரடப்பட்ட வழக்கு விசாரணையை எழும்பூர் நீதிமன்றம் டிச.11-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

நடிகர் விஷால் ரூ.1 கோடி வரை சேவை வரி செலுத்தவில்லை எனக் கூறி விசாரணைக்கு ஆஜ ராகுமாறு சேவை வரித் துறை யினர் கடந்த 2016 முதல் பலமுறை சம்மன் அனுப்பியும் விஷால் ஆஜராகவில்லை.

இதையடுத்து விஷாலுக்கு எதிராக சேவை வரித் துறை சார் பில் சென்னை எழும்பூர் பொரு ளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கெனவே நடிகர் விஷால், நீதிபதி மலர்மதி முன்பாக ஆஜராகியிருந்தார். அப்போது இந்த வழக்கை எதிர்கொள்ளத் தயார் என விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் விஷால் ஆஜராகவில்லை. அவரது தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி மனு தாக்கல் செய்தார். இதையடுத்து நீதிபதி இந்த வழக்கு விசாரணையை வரும் டிச.11-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

15 mins ago

இந்தியா

35 mins ago

தமிழகம்

58 mins ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்