புதுவை திரைப்பட விழாவில் ‘டூ லெட்’ தமிழ் படத்துக்கு 3 விருது

By செய்திப்பிரிவு

புதுச்சேரி சர்வதேச திரைப்பட விழா வில் தேசிய விருது பெற்ற தமிழ் திரைப்படமான ‘டூ லெட்'டுக்கு 3 விருதுகள் கிடைத்துள்ளன.

புதுச்சேரியில் சர்வதேச திரைப் பட விழா கடந்த 26-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெற்றது. இவ்விழாவை புதுச் சேரி சுற்றுலாத் துறை, அலை யன்ஸ் பிரான்சேஸ், ‘பிக்யூர் பிளிக்' என்ற இந்திய சினிமா ஸ்டிரீ மிங் நிறுவனம் இணைந்து நடத்தின. இதில் 124 பன்மொழி திரைப்படங்கள் திரையிடப்பட்டன. முதல் நாளில், தேசிய விருது வென்ற தமிழ் திரைப்படமான செழியன் இயக்கிய ‘டூ லெட்' திரைப்படம் முதலில் திரையிடப்பட் டது. தொடர்ந்து தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, இத்தாலி, இந்தி உள் ளிட்ட பல்வேறு மொழிகளைச் சார்ந்த 124 படங்கள் திரையிடப் பட்டன. இவ்விழாவில் சிறந்த திரைப்படங்களுக்கு நேற்று முன்தினம் இரவு பரிசுகள் வழங்கப் பட்டன. தேசிய விருது பெற்ற தமிழ் திரைப்படமான ‘டூ லெட்' 3 விருதுகளை வென்றது.

சிறந்த திரைப்படம், சிறந்த இயக் குநராக இப்படத்தின் இயக்குநர் செழியனும், சிறந்த எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத்தும் விருதுகளை வென்றனர்.

சிறந்த திரைக்கதைக்கான விருதை, ‘செக்மேட் டேர்சுப்' திரைப்படம் வென்றது. இத்திரைப் படமே சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதையும் கைப்பற்றியது. சிறந்த அனிமேஷன் விருதை துருக்கி பட மான ‘ப்ளூ டுமாரோ' படம் வென் றது. சிறந்த டாக்குமெண்டரி படத் துக்கான விருதை, ‘மெஷின்ஸ்' படத்துக்காக ராகுல் ஜெயின் பெற்றார். சிறந்த குறும்படத்துக் கான விருதை ஈரான் படமான, ‘ஐசலேட்டட் குரோஸ் ஆப் சாலி டியூடு' படம் வென்றது. சிறப்பு விருதை ஹங்கேரி படமான ‘க்யூப்மேன்' படம் வென்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

22 mins ago

சினிமா

40 mins ago

வாழ்வியல்

22 mins ago

தமிழகம்

58 mins ago

க்ரைம்

1 hour ago

வணிகம்

1 hour ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

உலகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்