விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகிறது ‘2.0’ டீஸர்

By செய்திப்பிரிவு

விநாயகர் சதுர்த்தி தினத்தன்று ரஜினியின் ‘2.0’ டீஸர் ரிலீஸாக இருக்கிறது.

ரஜினி நடிப்பில் ரிலீஸுக்குத் தயாராகிவரும் படம் ‘2.0’. ஷங்கர் இயக்கியுள்ள இந்தப் படத்தில், எமி ஜாக்சன் ஹீரோயினாகவும், அக்‌ஷய் குமார் வில்லனாகவும் நடித்துள்ளனர். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘2.0’, கடந்த வருட இறுதியில் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி கிராபிக்ஸ் பணிகள் முடியாததால், ரிலீஸ் தேதி தள்ளி சிலமுறை வைக்கப்பட்டு, கடைசியாக இந்த வருடம் நவம்பர் மாதம் 29-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மற்றும் இந்தியில் உருவாகியுள்ள இந்தப் படம், 13 மொழிகளில் டப் செய்யப்பட்டும் வெளியிடப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் டீஸரை விநாயகர் சதுர்த்தியன்று (செப்டம்பர் 13) வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

7 mins ago

விளையாட்டு

56 mins ago

இந்தியா

31 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்