டி.ராஜேந்தர் இயக்கத்தில் நமிதா நடிக்கும் ‘இன்றையக் காதல்டா’

By செய்திப்பிரிவு

டி.ராஜேந்தர் இயக்கத்தில் நமிதா நடிக்கும் படத்துக்கு ‘இன்றையக் காதல்டா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

டி.ராஜேந்தர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘வீராசாமி’. அவரே ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், மும்தாஜ் ஹீரோயினாக நடித்தார். அதன்பிறகு படம் எதையும் இயக்காத டி.ஆர்., கடந்த ஆண்டு வெளியான ‘கவண்’ படத்தில் நடித்திருந்தார். கே.வி.ஆனந்த் இயக்கிய இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மயில்வாகனன் என்ற கேரக்டரில் தொலைக்காட்சி உரிமையாளராக நடித்தார்.

இந்நிலையில், ஒரு படத்தை இயக்கி, நடிக்க இருக்கிறார் டி.ராஜேந்தர். லேடி டானாக நமிதா இந்தப் படத்தில் நடிக்கிறார். ராதாரவி, இளவரசன், விடிவி கணேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி, பாண்டு, ரோபோ சங்கர், மதன்பாப் என ஏகப்பட்ட பேர் நடிக்கும் இந்தப் படத்தில், முக்கிய வேடத்தில் டி.ஆரும் நடிக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, இயக்கம் என அனைத்தையும் டி.ராஜேந்தரே செய்யப் போகிறார். சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

11 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

சுற்றுலா

4 hours ago

கல்வி

4 hours ago

மேலும்