சாம் சி.எஸ். இசையில் பாடிய யுவன் சங்கர் ராஜா

By செய்திப்பிரிவு

‘வஞ்சகர் உலகம்’ படத்துக்காக சாம் சி.எஸ். இசையில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.

கடந்த வருடம் வெளியான ‘விக்ரம் வேதா’ மூலம் வெளிச்சத்துக்கு வந்தவர் சாம் சி.எஸ். தொடர்ந்து ‘தியா’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘மிஸ்டர் சந்திரமெளலி’ ஆகிய படங்களுக்கு இசையமைத்தார். எல்லாவற்றிலும் அவர் இசை பேசப்பட்டது.

தற்போது ‘கொரில்லா’, ‘100’, ‘ல‌ஷ்மி’, ‘அடங்க மறு’, ‘வஞ்சகர் உலகம்’, ‘நோட்டா’ ஆகிய தமிழ்ப் படங்களுக்கும், ‘ஒடியன்’ என்ற மலையாளப் படத்துக்கும், ‘முட்ரா’ என்ற தெலுங்குப் படத்துக்கும் இசையமைத்து வருகிறார். இதில், நடனத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள ‘லக்‌ஷ்மி’ படத்தில், 12 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், ‘வஞ்சகர் உலகம்’ படத்துக்காக யுவன் சங்கர் ராஜா குரலில் ஒரு பாடலைப் பதிவு செய்துள்ளார் சாம் சி.எஸ். மனோஜ் பீதா இயக்கிவரும் ‘வஞ்சகர் உலகம்’ படத்தில், குரு சோமசுந்தரம், சாந்தினி, அனிஷா ஆகியோர் நடிக்கின்றனர்.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

12 mins ago

ஜோதிடம்

24 mins ago

தொழில்நுட்பம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்