“வரலாற்றுப் பிழை செய்து விட்டீர்கள்” - ஜீ.வி.பிரகாஷ் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி வன்முறை குறித்து, ‘வரலாற்றுப் பிழை செய்து விட்டீர்கள்’ என ஜீ.வி.பிரகாஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை, கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் வீசியதுடன், துப்பாக்கிச் சூடும் நடத்தியது. இந்த வன்முறையில் இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். பலர், படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து ட்விட்டரில் தன்னுடைய கருத்தைப் பதிவு செய்துள்ள இசையமைப்பாளரும் நடிகருமான ஜீ.வி.பிரகாஷ், “உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி மக்கள் போராடுவதற்குத் தடைவிதிக்க முடியாது என்பதால், தங்கள் உரிமைக்காக அமைதிப் பேரணி சென்ற எம் மக்கள் மீது தடியடி, துப்பாக்கிச் சூடு நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

சில நூறு பேர் கொண்ட உங்களுக்கு முன்னால் நிற்கும் பல்லாயிரக்கணக்கான எம் மக்களின் நியாயமான உணர்வுக்கு மதிப்பளித்திருக்க வேண்டும். வரலாற்றுப் பிழை செய்து விட்டீர்கள்” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த், தேமுதிக தலைவர் விஜயகாந்த், அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதை மிஸ் பண்ணிடாதீங்க...

“தூத்துக்குடி வன்முறை மற்றும் உயிர் இழப்புகளுக்குத் தமிழக அரசே பொறுப்பு” - ரஜினிகாந்த்

‘தீயை நிறுத்துங்கள்; தீர்வு காணுங்கள்’ - கவிஞர் வைரமுத்து கோரிக்கை

தமிழினம் ஒருபோதும் வேடிக்கை பார்க்காது: ஸ்டெர்லைட் போராட்டத்தில் கைதான வ.கவுதமன் பேட்டி

ஸ்டெர்லைட் போராட்டத்தில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறோம்; அமைதி காக்க வேண்டும்: தமிழக அரசு வேண்டுகோள்

ஸ்டெர்லைட் போராட்டம்; துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு; 17 வயது மாணவியும் பலியான பரிதாபம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்