“ரஞ்சித்தின் நட்பு கிடைத்தது ரஜினியுடன் பணியாற்றத்தானோ எனத் தோன்றுகிறது” - கலை இயக்குநர் ராமலிங்கம்

By செய்திப்பிரிவு

‘ரஞ்சித்தின் நட்பு கிடைத்தது ரஜினியுடன் பணியாற்றத்தானோ எனத் தோன்றுகிறது” என கலை இயக்குநர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

பா.இரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘காலா’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படத்தில், மொத்தம் 9 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதன் இசை வெளியீட்டு விழா சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் பேசிய கலை இயக்குநர் ராமலிங்கம், “நான் 3 வயதில் இருந்தே தலைவரின் ரசிகன். எப்படிப்பட்ட ரசிகன் என்றால், பக்கா லோக்கல் ரசிகன். ரசிகர் மன்றம் வைத்து தலைவரை ரசித்த ரசித்த ரசிகன். நான் இன்று இங்கு நிற்க காரணம் அவர் தான். அவருடைய படங்களைப் பார்த்து, அவருடைய ஃபார்முலாக்களைப் பயன்படுத்தித்தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன்.

ஒரு ரசிகனா படம் பார்த்து விசிலடிப்பதைவிட, சக கலைஞனா அவருடன் பணியாற்றுவது என்பதை விவரிக்க வார்த்தைகள் இல்லை. எங்கோ இருக்கும் குக்கிராமத்தில் பிறந்த நான், உலகளாவியப் புகழ்பெற்ற நடிகருடன் பணியாற்றுவது என்பது மிகப்பெரிய பெருமை. நான் ரஞ்சித்துடன் பழகியது, அவருடைய நட்பு கிடைத்தது எல்லாமே இதுக்குத்தானோ எனத் தோன்றுகிறது.

மும்பையில் இருக்கும் தாராவி மாதிரியே செட் போட்டிருக்கோம். 80 சதவீத படப்பிடிப்பு இந்த செட்லதான் நடந்தது. படம் பார்த்தால் உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன்” என்றார்.

 

இதை மிஸ் பண்ணிடாதீங்க...

ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமல்ல... கமல் ரசிகர்களுக்கும் இன்று கொண்டாட்டமான நாள்

“நம் தமிழ் இஸ்லாமிய சகோதரர்களை இதைவிட இழிவுபடுத்த முடியாது” - கஸ்தூரி வேதனை

“முதன்முதலில் ரஜினி சாருக்காகப் பாடியதில் சந்தோஷம்” - பாடலாசிரியர் விவேக்

‘கற்றவை பற்றவை’ பாடலுக்கு வசனம் எழுதிய ரஜினிகாந்த்

“கமல்ஹாசனால் முதல்வராக முடியாது” - சாருஹாசன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

ஆன்மிகம்

14 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

11 hours ago

மேலும்