“கமல்ஹாசனால் முதல்வராக முடியாது” - சாருஹாசன்

By செய்திப்பிரிவு

‘கமல்ஹாசனால் முதல்வராக முடியாது’ என்று அவரது அண்ணன் சாருஹாசன் தெரிவித்திருக்கிறார்.

கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள படம் ‘தா தா 87’. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறன. தமிழக அரசியல் களத்தில் கமல்ஹாசன் மிக தீவிரமாக செயலாற்றிவரும் நிலையில், சாருஹாசன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

“நான் நாத்திகன், கடவுள் இல்லை என்று சொல்லலாம். ஆனால், ரஜினிகாந்த் இருக்கிறார். ஏனென்றால், மக்கள் அவரைக் கடவுளாகப் பார்க்கின்றனர். கமல்ஹாசன் தங்களுக்காக என்ன செய்வார் என மக்கள் கேட்கின்றனர். ஆனால், ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார் என்று கேட்கின்றனர். நீங்கள்தான் இந்த வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

எம்ஜிஆர் தமிழர் இல்லையென்றாலும், தமிழ் மக்கள் அவரை ஆதரித்தனர். சிவாஜி கணேசனை நிராகரித்தனர். அதேபோல, கமல்ஹாசனால் முதல்வராக முடியாது. ஏனென்றால், அவர் பிராமணர். தமிழகத்தில் பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக முடியாது. தனக்கு சாதியத்தில் நம்பிக்கை இல்லை என்று கமல் சொன்னாலும், மக்கள் அவரைப் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர் என்று கூறுவார்கள்.

யாரையும் திருமணம் செய்துகொள்ள வேண்டாம் என்று கமல்ஹாசனிடம் கூறினேன். நீங்கள் ஏன் திருமணம் செய்து கொணடீர்கள் என்று அவர் என்னைக் கேட்டார். குடும்ப விவகாரங்களில் மட்டும்தான் என்னால் என் யோசனைகளைப் பகிர முடியும். அவரது தொழில்முறை வாழ்க்கையைப் பற்றி ஏதும் பேச முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

 

இதை மிஸ் பண்ணிடாதீங்க...

“சமூகத்தின் குரலுக்கான படமாக ‘டிராஃபிக் ராமசாமி’ இருக்கும் என்று நம்புகிறேன்” - சகாயம் ஐஏஎஸ்

“எனது திரையுலக வாழ்வில் ‘இரும்புத்திரை’ மிகவும் சர்ச்சைக்குரிய படம்”: விஷால்

ஆபாச புகைப்பட விவகாரம்: நிவேதா பெத்துராஜ் கடும் சாடல்

‘பிக் பாஸ் 2’ போட்டியாளர்களில் நானா?- கஸ்தூரி மறுப்பு

ராஜேஷ் - சிவகார்த்திகேயன் பட நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

க்ரைம்

6 hours ago

மேலும்