“இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தை, பொழுதுபோக்குப் படமாக மட்டுமே பார்க்க வேண்டும்” - இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார்

By செய்திப்பிரிவு

‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தை, பொழுதுபோக்குப் படமாக மட்டுமே பார்க்க வேண்டும்’ என இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’. ‘ஹர ஹர மஹாதேவஹி’யைத் தொடர்ந்து இவர் இயக்கியுள்ள இந்தப் படத்தில், கெளதம் கார்த்திக் ஹீரோவாக நடித்துள்ளார். வைபவி ஷாண்டில்யா, யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி என 3 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். அடல்ட் ஹாரர் காமெடிப் படமாக உருவாகியுள்ள இது, மே 4 ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, சமீபத்தில் நடைபெற்றது. அதில் பேசிய சந்தோஷ் பி ஜெயக்குமார், “நான் இயக்கியுள்ள இரண்டாவது அடல்ட் படம் இது. கருத்து சொல்லும் படங்களை எடுக்காமல், இவர் ஏன் இதுமாதிரி படங்களாகவே எடுக்கிறார் என்று உங்களுக்கு கேள்வி எழலாம். இது, சினிமாவில் ஒரு ஜானர். உலக சினிமாவின் எல்லா இடத்திலும் இந்த ஜானர் இருக்கிறது, ஆனால் தமிழில் இல்லை. இந்தப் படத்தை பொழுதுபோக்குப் படமாகப் பார்த்தால், பொழுதுபோக்காக மட்டுமே தெரியும். அப்படித்தான் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

உலகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வேலை வாய்ப்பு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்