கண்ணன் - அதர்வா இணையும் பூமராங்

By செய்திப்பிரிவு

கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடிக்கவுள்ள படத்திற்கு 'பூமராங்' என தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடிக்கவுள்ள படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இப்படத்தின் தலைப்பு அடங்கிய போஸ்டரை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

'பூமராங்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அதர்வாவுடன் மேகா ஆகாஷ், சுஹாசினி மணிரத்னம், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி, உபன் படேல் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இயக்குநர் கண்ணனின் 'மசாலா பிக்ஸ்' நிறுவனமும், எம்.கே.ஆர்.பி நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறார்கள். இசையமைப்பாளராக 'அர்ஜுன் ரெட்டி' இசையமைப்பாளர் ரதன், ஒளிப்பதிவாளராக பிரசன்னா, எடிட்டராக ஆர்.கே.செல்வா உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் பணிபுரியவுள்ளார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

க்ரைம்

21 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

45 mins ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

மேலும்