டிக்:டிக்:டிக் என் 100-வது படம்; 1000 படங்களுக்கு மேல் பணியாற்ற விருப்பம்: இமான்

By செய்திப்பிரிவு

'டிக்:டிக்:டிக்' என் 100-வது படம். 1000 படங்களுக்கு மேல் பணியாற்ற விரும்புகிறேன் என்று இசையமைப்பாளர் இமான் பேசினார்.

இந்தியாவின் முதல் ஸ்பேஸ் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் 'டிக்:டிக்:டிக்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. 'டிக்:டிக்:டிக்' படத்தின் இயக்குநர் சக்தி சக்தி சௌந்தர்ராஜன், ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஜெயபிரகாஷ், இசையமைப்பாளர் இமான் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் இசையமைப்பாளர் டி இமான் பேசுகையில், ''இது என்னுடைய நூறாவது படம். இதற்காக இறைவனுக்கும், இங்கு கூடியிருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி சொல்கிறேன். இந்த நூறை ஒன்றுக்குப் பின்னால் வரும் இரண்டு ஸீரோவாக பார்க்கவில்லை. இரண்டு ஸீரோவிற்குப் பிறகு வரும் ஒன்றாகப் பார்க்கிறேன். இதிலிருந்து மீண்டும் இசைப் பயணத்தை தொடங்குகிறேன். தொடர்ந்து ஆயிரம் படங்களுக்கு மேல் பணியாற்ற விரும்புகிறேன்.

பொதுவாக நாங்கள் கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ள படங்களுக்கு பின்னணி இசை அமைக்கும் போது ஏராளமான மாற்றங்கள் இருக்கும். ஆனால், 'டிக்:டிக்:டிக்' படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் வருவதற்கு முன்னரே இயக்குநர் ஒவ்வொரு காட்சியின் நீளம் குறித்தும், அதில் இடம்பெறும் விஷயங்கள் குறித்தும் டீட்டெயில் இருந்ததால் பின்னணி இசையை விரைவாக முடிக்க முடிந்தது.

அதேபோல் என்னுடைய இசைப் பயணத்தில் என்னுடைய இணைந்து பணியாற்றிய அனைத்து இசைக்கலைஞர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார் இமான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்