டிராபிக் ராமசாமி படத்தில் நடிப்பதில் பெருமைப்படுகிறேன்: பிரகாஷ்ராஜ்

By செய்திப்பிரிவு

வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சமூகப் போராளியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் படத்தில் நான் நடித்ததை மிகுந்த பெருமையாக கருதுகிறேன் என்று பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.

க்ரீன் சிக்னல் கம்பெனி நிறுவனம் மூலமாக எடுக்கப்பட்டு வரும் படம் 'டிராபிக் ராமசாமி'. விஜய் விக்ரம் இயக்கும் இப்படத்தில் டிராபிக் ராமசாமியாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கிறார். அவருடைய மனைவியாக ரோகிணி நடிக்கிறார். இவர்களுடன் ஆர்.கே.சுரேஷ், உபாசனா, இமான் அண்ணாச்சி, அம்பிகா, சார்லஸ் வினோத், மோகன்ராம், தரணி, சேத்தன், அம்மு, பேபி ஷெரின் ஆகியோர் நடிக்கின்றனர்.

பிரகாஷ்ராஜ் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். படம் குறித்து பிரகாஷ்ராஜ் கூறும் போது, "வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சமூகப் போராளியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்தப் படத்தில் நான் நடித்ததை மிகுந்த பெருமையாக கருதுகிறேன்" என்று குறிப்பிட்டார்.

'டிராபிக் ராமசாமி' படத்தின் ஒளிப்பதிவை குகன் எஸ்.பழனியும், பாடல்களை கபிலன் வைரமுத்துவும், இசையை ஹர ஹர மகாதேவகி புகழ் பாலமுரளி பாலுவும், எடிட்டிங் பிரபாகரும் கவனிக்கிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

31 mins ago

ஜோதிடம்

41 mins ago

உலகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்