டெல்லியில் ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் பாடுகிறார் ரஜினி

By ஏஎன்ஐ

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பல்வேறு பெருநகரங்களிலும் தனது இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அந்த வகையில் தலைநகர் டெல்லியில் அவர் நடத்தவுள்ள நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்தும் கலந்து கொண்டு பாடல் பாடுகிறார்.

வரும் 23-ம் தேதி (டிசம்பர் 23) அன்று என்கோர் (Encore) என்ற தலைப்பில் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. அந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு பாடலைப் பாடவிருக்கிறார்.

ஷங்கர் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் '2.0' படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். திரைத்துறையில் ஏ.ஆர்.ரஹ்மான் கால் பதித்து 25 ஆண்டுகள் ஆகும் நிலையில், ரஹ்மானை கவுரவிக்கும் வகையில் ரஜினிகாந்த் இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடுகிறார்.

ரஜினிகாந்த் 1992-ல் 'மன்னன்' எனும் படத்தில் ரஜினிகாந்த் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்