தவறுகளை ஒப்புக் கொண்டு பதவி விலகுங்கள் விஷால்: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

By ஸ்கிரீனன்

தவறுகளை ஒப்புக்கொண்டு பதவி விலகுங்கள் விஷால் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்திருக்கிறார்.

சமீபத்தில் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்கத்தின் 10-வது பொதுக்குழு கூட்டம் பெரும் சலசலப்புடன் முடிவு பெற்றிருக்கிறது. அக்கூட்டத்தில் ராதாகிருஷ்ணன் அணியினர் எழுப்பிய கேள்விகள் அனைத்துமே சமூக வலைதளத்தில் வீடியோவாக வெளியானது. இதற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தவறுகளை ஒப்புக் கொண்டு விஷால் பதவி விலக வேண்டும் என்று சுரேஷ் காமாட்சி மீண்டும் அறிவுறித்தியிருக்கிறார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

பொதுக்குழு அன்று சரியான நேரத்தில் நிர்வாகிகள் வரவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்த பாடும்போது நிர்வாகிகள் இல்லை. தமிழ்த்தாய் வாழ்த்தைப் புறக்கணித்து அவமானம் நேரும் வகையில் நடந்துள்ளனர்.

சங்கத்தின் ஆண்டு வரவு செலவை விஷால் தரப்பினர் தாக்கல் செய்ததாக சொல்லி வருவது தவறு. அவ்வாறு அவர்கள் தாக்கல் செய்யவில்லை. அதைக் கேட்ட ஒருதரப்பினருக்கும் இன்னொரு தரப்பினருக்கும் வாக்குவாதம் கருத்துமோதல் ஏற்பட்டது. இருதரப்பினருமே இதில் சரிசமமாக ஈடுபட்டனர்.

நிறைவாக, "தேசியகீதம் பாடுவதை நீதிபதியாகிய என்னிடம் கூட முறைப்படி அனுமதி பெறாமல் தன்னிஷ்டமாக கூட்டத்தை முடித்துவிட்டுக்கிளம்பிவிட்டனர் நிர்வாகிகள்" எனக் குறிப்பிட்டுள்ளார் நீதிபதி.

அதன் நகலை உங்களுக்கு அனுப்பியுள்ளேன். அதை கிரகித்துக்கொண்டு விஷால் பரப்பிவரும் பொய் செய்தியை தவிர்த்து அவரது உண்மை முகத்தை வெளிக்கொணர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். மேலும் அன்று கணக்கு கேட்ட அத்தனை பேர் மீதும் ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் விஷால். கணக்கு கேட்ட நடிகர் சங்க உறுப்பினர்கள் 300 பேரை நீக்கியவர் தயாரிப்பாளர் சங்கத்திலும் உறுப்பினர்களை மிரட்டும் வண்ணம் நடந்துகொள்கிறார்.

உறுப்பினர்களின் கேள்வியை எதிர்கொள்ள முடியாத நிர்வாகம் அவர்கள் மீது நீக்கம் என்ற அராஜக ஆயுதத்தை வீசுகிறது. இது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடக்கப்போகும் தவறான முன்னுதாரணமாகிவிடும். எனவே விஷால் தனது தரப்பு தவறுகளை முதலில் ஒப்புக்கொண்டு பதவி விலகுவதே சரியானதாக இருக்கக்கூடும்

இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

53 mins ago

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்