அஜித் படத்தை இயக்குகிறோமா? - விக்ரம் வேதா இயக்குநர்களின் பதில்

By ஸ்கிரீனன்

அஜித் படத்தை இயக்கவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திக்கு 'விக்ரம் வேதா' இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி பதிலளித்தார்கள்.

மாதவன் - விஜய் சேதுபதி நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'விக்ரம் வேதா' படத்தை இயக்கிய இணை புஷ்கர் - காயத்ரி. தற்போது தமது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்படத்தையும் சஷிகாந்த் தயாரிக்கவுள்ளார்.

இந்நிலையில் அவர்கள் அஜித் நடிக்கவுள்ள புதிய படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து புஷ்கர் - காயத்ரியிடம் கேட்ட போது, "தற்போது அடுத்த படத்துக்கான கதையை உருவாக்கி வருகிறோம். எப்போதுமே நாங்கள் முழுமையாக கதை தயாரானவுடன் தான் நடிகர்களை அணுகும் பழக்கமுடையவர்கள்.

இதுவரை நாங்கள் கதையையே இறுதி செய்யவில்லை. அப்படியிருக்கும் போது அஜித் சார் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளோம் என்ற செய்தியில் உண்மையில்லை. எங்கியிருந்து இப்படியொரு செய்தி உருவானது என்பதே தெரியவில்லை" என்று தெரிவித்தார்கள்.

இதனிடையே 'விக்ரம் வேதா' படத்தின் தெலுங்கு மற்றும் இந்தி ரீமேக் பேச்சுவார்த்தையும் தொடங்கப்பட்டுள்ளது. அப்பேச்சுவார்த்தையும் இன்னும் 3 மாதங்களில் முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது. இதனையும் சஷிகாந்த்தே தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

11 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

சுற்றுலா

4 hours ago

கல்வி

4 hours ago

மேலும்