நவம்பர் 7-ல் இயக்கத்தார் கூடுவது பலவருட பழக்கம்; கட்சி அறிவிப்பு இல்லை: கமல்

By செய்திப்பிரிவு

 

ஊடக உந்தல் கருதி கட்சியை அறிவிக்க முடியாது என்று கூறியுள்ள கமல், நவம்பர் 7-ல் கட்சி அறிவிப்பு இல்லை என்றும் கூறியுள்ளார்.

தான் கலந்துகொள்ளும் விழாக்கள், நிகழ்ச்சிகள் போன்றவற்றிலும் ட்விட்டர் பக்கத்திலும் தமிழக அரசைக் கடுமையாக விமர்சித்து வருகிறார் கமல். இப்போது நான் அரசியலில்தான் இருக்கிறேன் என்றும் தெரிவித்து வருகிறார். மேலும், அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக அரசியல் விமர்சகர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோருடனும் ஆலோசித்து வருகிறார்.

இந்நிலையில் வரும் நவம்பர் 7-ம் தேதி தனது பிறந்த நாளில் ரசிகர்களைச் சந்தித்து, தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட கமல் திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

ஆனால், நவம்பர் 7-ல் கட்சி அறிவிப்பு இல்லை என்று கமல் தெரிவித்துள்ளார். இது குறித்து கமல் தன் ட்விட்டர் பக்கத்தில், ''ஊடக உந்தல் கருதி கட்சியை அறிவிக்க முடியாது. நவம்பர் 7 இயக்கத்தார் கூடுவது எம் பலவருட வழக்கம். பொது அறிவிப்புகள் மக்கள் மன்றத்திலேயே நடக்கும்'' என்று கமல் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

18 mins ago

இந்தியா

47 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

மேலும்