'ஜெர்சி' இயக்குநருடன் இணையும் ராம்சரண்

By செய்திப்பிரிவு

ராம்சரண் நடிக்கவுள்ள அடுத்த படத்தை 'ஜெர்சி' இயக்குநர் கவுதம் இயக்கவுள்ளார்.

2019-ம் ஆண்டு கவுதம் இயக்கத்தில் நானி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் 'ஜெர்சி'. இந்தப் படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இதன் இந்தி ரீமேக் தொடங்கப்பட்டது. ஷாகித் கபூர் நடித்துள்ள இந்தப் படத்தை கவுதமே இயக்கியுள்ளார்.

'ஜெர்சி' இந்தி ரீமேக் இன்னும் வெளியாகவில்லை. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான பணிகளைத் தொடங்கினார் கவுதம். இதில் நாயகனாக நடிக்க ராம்சரணிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

இன்று (அக்டோபர் 15) விஜயதசமியை முன்னிட்டு ராம்சரண் - கவுதம் கூட்டணி படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை யுவி கிரியேஷன்ஸ் மற்றும் என்.வி.ஆர் சினிமா ஆகியவை இணைந்து தயாரிக்கவுள்ளன. இது ராம்சரண் நடிப்பில் உருவாகும் 16-வது படமாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

23 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்