'லூசிஃபர்' தெலுங்கு ரீமேக்கில் ரகுமான்

By செய்திப்பிரிவு

தெலுங்கில் உருவாகவுள்ள 'லூசிஃபர்' ரீமேக்கில் விவேக் ஓபராய் கதாபாத்திரத்தில் ரகுமான் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான 'லூசிஃபர்' திரைப்படம் மலையாளத் திரைப்பட உலகில் பல வசூல் சாதனைகளைப் படைத்தது. நடிகர் ப்ரித்விராஜின் இயக்கத்தில் வெளியான முதல் படம் இது. மலையாளத்தில் 200 கோடி ரூபாய் வசூலைக் குவித்த முதல் படம் 'லூசிஃபர்' என்பது கவனிக்கத்தக்கது.

இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையைக் கைப்பற்றினார் ராம் சரண். அதில் மோகன்லால் கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. இந்தப் படத்தை இயக்கவிருப்பவர்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. இறுதியாக 'சாஹோ' படத்தின் இயக்குநர் சுஜீத் இயக்குவார் என்பது உறுதியானது.

தற்போது சிரஞ்சீவியுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. 'லூசிஃபர்' படத்தில் வில்லனாக விவேக் ஓபராய் நடித்திருந்தார். தெலுங்கில் அந்தக் கதாபாத்திரத்தில் ரகுமான் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.

கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'ஆச்சாரியா' படத்தில் சிரஞ்சீவி நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து 'லூஃசிபர்' ரீமேக்கில் நடிக்க சிரஞ்சீவி தேதிகள் ஒதுக்கவுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

14 secs ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்